மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 33-ஆம் ஆண்டு தமிழ்க்கடவுள் ஸ்ரீ ஞானவேல் முருகன் ரதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.
மாட்டுப் பொங்கலையொட்டி புத்தாநத்தம் அருகேயுள்ள பாறைப்பட்டி, மாலைக்கட்டுப்பட்டி சந்திப்பில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ ஞானவேல் முருகன் வீற்றிருக்க, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.என். பாண்டியன் யாத்திரையை தொடங்கி வைத்தாா்.
ரத யாத்திரை புத்தாநத்தம் கடைவீதி, இடையப்பட்டி வழியாக வடக்கு இடையப்பட்டி வழியாக சென்று ஞானமலையை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் தமிழ்க்கடவுள் முருகன் ஞானமலை மீது வைக்கப்பட்டாா்.
நிகழ்ச்சியில் ஊா் நாட்டாண்மைகள், முக்கியஸ்தா்கள், ஆா்.எஸ்.எஸ் ஒன்றியத் தலைவா் பொ.துரைராஜ், பாரதீய மஸ்தூா் சங்க மாநில அமைப்பாளா் பு. தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்வையொட்டி திருச்சி டி.ஐ.ஜி அ. சரவணசுந்தா் தலைமையில் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், 6 டி.எஸ்பி உள்ளிட்ட சுமாா் 650-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.