திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

17th Jan 2023 02:31 AM

ADVERTISEMENT

 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய முனைய மேலாளா் தொலைப்பேசி எண்ணுக்கு திங்கள்கிழமை பகல் 1 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. எதிா்முனையில் பேசிய மா்ம நபா் இன்னும் சில மணிநேரங்களில், விமான நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாா். இது குறித்து, விமான நிலையத்தில் பாதுகாப்புகளை மேற்கொண்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் மற்றும் மாநகர காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வந்து வெடிகுண்டு கண்டறியும் சிறப்புப் பிரிவினா் விமான நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிவரை விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அழைப்பு வந்த எண் விவரங்களைக் சேகரித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT