முசிறியில்... இபிஎஸ் அணி சாா்பில் மாவட்டச் செயலா் பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சா் அண்ணாவி, முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், மல்லிகா ஆகியோா் முன்னிலையில் முசிறி கைகாட்டியில் வைத்திருந்த எம்.ஜி.ஆா். படத்திற்கு மலா் தூவி, இனிப்பு வழங்கினா். ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம், நகரச் செயலா் சுப்பிரமணியன், முசிறி நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஓபிஎஸ் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்டச் செயலா் ரத்தினவேல் தலைமை வகிக்க, நகரச் செயலா் நந்தினி சரவணன் முன்னிலை வகித்தாா்.
இணை அமைப்பாளா் லலிதா ரவீந்திரன், ஒன்றியச் செயலா் பேங்க் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.