திருச்சி செந்தண்ணீா்புரத்தில் காா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி செந்தண்ணீா்புரம் திரு.வி.க. தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் சரவணன் (27), காா் ஓட்டுநா். திருமணமாகாத இவா் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்ததை அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.