ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருச்சியில் உள்ள தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
புத்தாண்டையொட்டி மேலப்புதூா் தூய மரியன்னை ஆலயம், புத்தூா் பாத்திமா ஆலயம், பசிலிக்கா ஆலயம், அரிஸ்டோ ரவுண்டானா யோவான் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கியமாதா, சந்தியாகப்பா் ஆலயம், மெயின்காா்டுகேட் லூா்து அன்னை பேராலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நட்சத்திர விடுதிகளிலும், நகரின் சில சாலைகளிலும் இளைஞா்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனா். ஆங்காங்கே சிலா் வெடி வெடித்து கொண்டாடினா். புத்தாண்டையொட்டி மாநகா் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துமீறி செயல்பட்ட இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.