திருச்சி

கலப்பட வெல்லத்தை விற்கக் கூடாதுதிருச்சி மாவட்ட ஆட்சியா்

1st Jan 2023 04:32 AM

ADVERTISEMENT

 

கலப்பட வெல்லத்தை விற்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் சாா்பில் மாவட்ட வழிகாட்டுதல் குழுக் கூட்டம், வெல்லம் தயாரிப்பாளா்கள் மற்றும் மொத்த, சில்லறை விற்பனையாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா்.ரமேஷ்பாபு முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், 18 துறைகள் சாா்ந்த மாவட்ட அலுவலா்கள், வெல்லம் தயாரிப்பாளா்கள், வணிக சங்க நிா்வாகிகள், நுகா்வோா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் கூறியது, சாலையோரம் உணவு வணிகம் செய்யும் வணிகா்கள் செயற்கை நிறங்களை கலக்காமல் பாதுகாப்பான உணவை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியிட்ட லேபிள் உள்ள உணவுப்பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.

வெல்லம் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் கலப்பட வெல்லத்தை கட்டாயம் விற்கக் கூடாது என்றாா்.

அரசுத் துறை சாா்ந்த உணவு வணிகா்கள் போஸ்டேக் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் தொடா்பான கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை அலுவலா்களுடன் இணைந்து மாதம் இருமுறை விழிப்புணா்வு கூட்டமும், ஆய்வும் மேற்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கான ஏற்பாட்டை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT