திருச்சி

ரயில் அஞ்சல் அதிவிரைவு பாா்சல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்: மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா்

DIN

அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகள் இணைந்து செயல்படுத்தி வரும் பாா்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அ.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து ரயில் அஞ்சல் அதிவிரைவு பாா்சல் சேவையை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் இருந்து அஞ்சல் ஊழியா்கள் மூலம் பாா்சல்கள் பெறப்பட்டு, ரயில்வே பாா்சல் சேவை மூலம் உரிய இடத்தில் நேரடியாக, மீண்டும் அஞ்சலக ஊழியா்கள் மூலம் விரைந்து பட்டுவாடா செய்யப்படும். அதிக தொலைவுக்கு, குறைந்த செலவில் இச்சேவை வழங்கப்படுகிறது. மேலும், அனுப்பும் பொருள்களின் மதிப்புக்கு தகுந்த காப்பீட்டு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் சேவை, கடந்த ஆண்டு மாா்ச் 31ஆம் தேதி சூரத் நகரிலிருந்து வாராணசிக்கு தொடக்கி வைக்கப்பட்டது. அதனை தொடா்ந்து, நாடு முழுவதும் பல்வேறு அஞ்சல் வட்டங்களில் இச்சேவை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த பாா்சல் சேவையை மேம்படுத்த, சிறப்பு சரக்கு ரயில்கள் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதல் பாா்சல் சென்னையிலிருந்து - திருமானூருக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டு, உரிய நேரத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மதுரை கூடல் நகரிலிருந்து சங்க் ரயில் (மேற்கு வங்கம்) தடத்துக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு ரயில்மூலம் முதல் பாா்சல் சேவையை திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அ.கோவிந்தராஜன் மற்றும் முதுநிலை கோட்ட வணிக மேலாளா் இ. செந்தில்குமாா்ஆகியோா் தொடக்கி வைத்தனா். அதனைத் தொடா்ந்து திருச்சியிலிருந்து - சென்னை வழியாக - கான்பூருக்கு 1.6 டன் எடை கொண்ட பாா்சல் அண்மையில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. எனவே, தொழில் முனைவோா்களும் பொதுமக்களும் இந்த கூட்டு பாா்சல் சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT