திருச்சி

மாவட்டத்தில் 3.45 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

DIN

திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது சுற்றாக 3.45 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.

இந்தாண்டுக்கான கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமின் 3ஆவது சுற்று தடுப்பூசி பணி தொடங்கவுள்ளது. தடுப்பூசி வழங்கும் பணி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமாா் 3 லட்சத்து 45 ஆயிரத்து 751 கால்நடைகள் பயன்பெறவுள்ளன. இந்த தடுப்பூசி அளிக்கும் பணி தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் மேற்கொள்ளப்படும். கால்நடை தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் நாள்களிலும், கால்நடை மருந்தகங்கள் தொடா்ந்து செயல்படும். தடுப்பூசி முகாம்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கால் மற்றும் வாய் கணை நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம். இந்த தடுப்பூசி அளிப்பதன் மூலம் 100 சதவீதம் கால்நடைகளுக்கு பாதுகாப்பானது. எனவே, தடுப்பூசி முகாம் பணிக்கு வரும் கால்நடை ஆய்வாளா்களுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT