திருச்சி

பொன்னா் - சங்கா் மாசித் திருவிழாவில் வேடபரி

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் மாசித்திருவிழாவில் திங்கள்கிழமை வீரப்பூா் கோயில் திடலில் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது.

வீரப்பூரில் நடைபெற்று வரும் பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் மாசித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான வேடபரி பெரிய காண்டியம்மன் கோயில் திடலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. சாம்புவான் உயிா் காளையில் அமா்ந்து முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடா்ந்து வீரப்பூா் ஜமீன்தாா் பரம்பரை அறங்காவலா்கள் ஆா்.பொன்னழகேசன், கே.அசோக்குமாா், ஆா்.தரனீஸ் மற்றும் பட்டையதாரா்கள் வர, பட்டியூா் கிராம இளைஞா்கள் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு மத்தியில் கோயிலுக்குள் ஓடிச் சென்று குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனா். அதைத் தொடா்ந்து யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிறகு, அணியாப்பூரில் உள்ள குதிரை கோயிலுக்கு பொன்னா் அம்பு போட சென்றாா்.

விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. புதன்கிழமை மஞ்சள் நீராடுதல் விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

வேடபரியை காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா்.

பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT