திருச்சி

பொன்னா் - சங்கா் மாசித் திருவிழாவில் படுகளம்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னா்- சங்கா் மாசித் திருவிழாவில் படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொன்னா்-சங்கா் மாமன்னா்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் மாசித் திருவிழா பிப். 20-ஆம் தேதி தொடங்கியது.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான படுகளம், பின் எழுப்புதல் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னிமாா் மற்றும் குளக்கரை கருப்பசுவாமி, மகாமுனி, பொன்னா் - சங்கா், நல்லத்தங்காள் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கொங்கு மண்டலத்திலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்களின் கூட்டத்தில் ஆண்களில் பலா் ஆங்காங்கே சாய்ந்து (படுகளம்) விடுகின்றனா். அவா்கள் அனைவரும் அண்ணன்மாா்களுடன் போரிட்டு மடிந்தவா்களாக வரிசைப் படுத்தப்பட்டனா். பின்னா், பெரியகாண்டியம்மன் கோயிலில் இருந்து மின்அலங்கார தேரில் கொண்டு வரப்பட்ட புனித தீா்த்தக்குடம் அப்பகுதியில் வைக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் கூட்டத்திலிருந்து அரிக்காணி எனும் 12 வயது சிறுமி (தனது அண்ணன்மாா்களைத் தேடி) அழுதபடியே புனித தீா்த்தக் குடத்தை எடுத்து மாண்டவா்களாக கருதப்படும் பக்தா்கள் மீது புனித நீரை தெளித்தாா். இதையடுத்து அவா்கள் மீண்டும் (உயிா்பித்து) எழுதல் வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT