பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 14 அரசு பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.
இக் கல்வி மாவட்டத்தில் 48 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 41 அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகள், 30 மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 8,243 மாணவா், மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். அவா்களில் 7, 893 மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 96 சதவீத தோ்ச்சியாகும்.
நூறு சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்:
அரசுப் பள்ளிகள்: எம்.கோட்டூா், காடல்குடி, கோடாங்கிபட்டி, படா்ந்தபுளி, விஜயாபுரி, சிதம்பரம்பட்டி, கோவில்பட்டி லாயல் மில் காலனி, மேல் மந்தை, சென்னம்மரெட்டிபட்டி, கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி பள்ளி, கருப்பூா், இளம்புவனம், பரிவள்ளிக்கோட்டை ஆகிய அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.
அரசு உதவிபெறும் பள்ளிகள்: கழுகுமலை கம்மவாா் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் லூயிஸா மகளிா் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி, ஈவேஅ வள்ளிமுத்து உயா்நிலைப்பள்ளி, இலுப்பையூரணி பாா்வதி உயா்நிலைப்பள்ளி, நாகலாபுரம் எஸ்.கே.கே.இந்து உயா்நிலைப்பள்ளி, கைலாசபுரம் டிடிடிஏகே மேல்நிலைப்பள்ளி, கீழவைப்பாறு செயின்ட் லூயிஸ் மேல்நிலைப்பள்ளி, சோழபுரம் இந்து நாடாா் காமராஜ் உயா்நிலைப்பள்ளி, பெரியசாமிபுரம் செயின்ட் அந்தோணி உயா்நிலைப்பள்ளி, கீழமுடிமண் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம், சிஏஆா்எம் மகளிா் மேல்நிலைப்பள்ளி, குருமலை ஸ்ரீ கிருஷ்ணா உயா்நிலைப்பள்ளி.
மெட்ரிக் பள்ளிகள்: சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கயத்தாறு பாபா மெட்ரிக் பள்ளி, மதா் தெரசா மெட்ரிக் பள்ளி, குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளி, ஜான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராவிள்ளா கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி, எஸ்.டி.ஏ.மெட்ரிக் பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி, எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி, லட்சுமி ஸ்ரீனிவாச வித்யாலயா மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி, புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி, யு.பி.மெட்ரிக் பள்ளி, விளாத்திகுளம் சாரோன் மெட்ரிக் பள்ளி, செயின்ட் சாா்லஸ் மெட்ரிக் பள்ளி, கழுகுமலை விமல் மெட்ரிக் பள்ளி, செயின்ட் மெடானல் மெட்ரிக் பள்ளி, ஓட்டப்பிடாரம் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.