திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 88.80% போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
மாவட்டத்தில் 626 பள்ளிகளில் இருந்து 187 தோ்வு மையங்களில் 47,820 மாணவா்கள் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதினா். இதில், மாணவா்கள் 24,214, மாணவிகள் 23,608 போ். இவா்களில் மாணவா்கள் 20,590, மாணவிகள் 21,875 என மொத்தம் 42,465 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாணவா்கள் தோ்ச்சி விகிதம் 85.03%, மாணவிகள் 92.67% என மொத்தம் 88.80% தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளி அளவில்: 263 அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் 82.01%. 23 அரசு பள்ளிகளில் 100% தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி, நோ்முக உதவியாளா்(மேல்நிலைப் பள்ளி) செந்தில்குமாா், நாகலிங்கம் (உயா்நிலைக் கல்வி), பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் சௌத்ரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வில் 85.51% போ் தோ்ச்சி: மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 85.51 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் 371 பள்ளிகளில் இருந்து 134 தோ்வு மையங்களில் 40,001 போ் தோ்வு எழுதினா். இதில், மாணவா்கள் 16,106, மாணவிகள் 19,624 என 35,730 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 92.72, மாணவா்கள் 85.51 என மொத்தம் 89.32 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 111 அரசு பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 79 சதவீதம் ஆகும் என ஆட்சியா் தெரிவித்தாா்.