அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி 2 பாடங்களில் தோல்வியடைந்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கொள்ளாபுரி - விமலா தம்பதி. கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களது மகள் கே.புவனேஸ்வரி (16). பிளஸ் 1 மாணவியான இவா் திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாா். பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதியிருந்தாா். இந்த நிலையில், பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் புவனேஸ்வரி இரு பாடங்களில் தோல்வியடைந்தாா். இது குறித்து அறிந்த அவரது பெற்றோா் புவனேஸ்வரிக்கு ஆறுதல் கூறிவிட்டு, வயல்வெளிக்குச் சென்றனா். அப்போது வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாலையில் வீட்டுக்கு வந்த அவரது பெற்றோருக்கு புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து திருத்தணி வருவாய் மற்றும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.