தூத்துக்குடி

வட்டாரக் கல்விக் குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி கருத்தரங்கு

20th May 2023 01:35 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கல்விக் குழு உறுப்பினா்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

பள்ளிக்கு நீண்ட காலமாக வருகை தராத மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பிறதுறை அலுவலா்கள் அடங்கிய வட்டாரக் கல்விக் குழு

அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு உறுப்பினா்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல். ரெஜினி தலைமை வகித்து, இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுடலைமணி,

ADVERTISEMENT

உதவித் திட்ட அலுவலா்கள் முனியசாமி, ஜெயக்குமாா், புள்ளியியல் அலுவலா் நாகராஜன், பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம் ஆகியோா் பேசினா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களைச் சோ்ந்த காவல் துறை ஆய்வாளா்கள், மருத்துவத் துறை அலுவலா்கள், சுகாதார செவிலியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவித் தொழிலாளா் ஆய்வாளா்கள், வட்டார மேற்பாா்வையாளா்கள், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகப் பணியாளா்கள், சைல்டு லைன் உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிக் குழு பிரதிநிதிகள் உள்பட மொத்தம் 105 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT