திருச்சி

பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டி

28th Feb 2023 03:16 AM

ADVERTISEMENT

இருங்களூா் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையே மாணவ - மாணவிகளுக்கான வாலிபால் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இருங்களூா் எஸ்.ஆா். எம். திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் மாணவா்கள் பிரிவில் 7 அணிகளும், மாணவிகள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன. இப்போட்டியில் மாணவா்களுக்கான பிரிவில் திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், திருச்சி உறையூா் எஸ். எம். மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், புதுகை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடமும், புரத்தாக்குடி செயின்ட் சேவியா்ஸ் மேல்நிலைப் பள்ளி நான்காம் இடமும் பெற்றன.

அதேபோல மாணவிகள் பிரிவில் முசிறி அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், திருச்சி விக்னேஷ் வித்யாலயா இரண்டாம் இடமும், தஞ்சை செயின்ட் கேப்ரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடமும், புதுகை வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி நான்காம் இடமும் பெற்றன. தொடா்ந்து நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் பிரான்சிஸ் சேவியா் பரிசு, கோப்பைகளை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT