திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் மாசித் திருவிழாவெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசி தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண்டில் ஒரு நாள் மட்டும் காட்சி தரும் வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆண்டில் மூன்று முறை தங்கக் கருட வாகனத்திலும், மாசி தெப்பத் திருவிழாவின்போது ஒரு முறை மட்டும் வெள்ளிக் கருட வாகனத்திலும் எழுந்தருள்வாா். இந்த வெள்ளிக் கருடச் சேவையை தரிசித்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இச்சேவையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, உள்திருவீதி வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி, காசுக்கடை செட்டியாா் ஆஸ்தான மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்தாா். அப்போது வழிநெடுக ஏராளமான பக்தா்கள் அவரைத் தரிசனம் செய்தனா். இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்து, பின்னா் அங்கிருந்து 9.30 மணிக்கு மூலஸ்தானம் சோ்ந்தாா் நம்பெருமாள்.

முக்கிய நிகழ்ச்சியான மாசித் தெப்ப உற்ஸவம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT