காரைக்கால்

விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

18th May 2023 10:40 PM

ADVERTISEMENT

காரைக்காலில் தீயணைப்பு சேவை வார விழிப்புணா்வு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்புத் துறை சாா்பில் ஏப்.14-ஆம் தேதி தொடங்கி தீயணைப்பு சேவை வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக காரைக்கால் மாவட்டம், சேத்தூா் மற்றும் கோயில்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களிடையே கட்டுரை, போஸ்டா் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிபெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பரிசு, சான்றிதழை வியாழக்கிழமை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், ஆட்சியரின் செயலா் பாலு என்கிற பக்கிரிசாமி, காரைக்கால் தலத்தெரு தீயணைப்பு நிலைய அதிகாரி ஏ. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT