காரைக்கால்

.திருநள்ளாறு கோயில் யானை நீராட ஷவா் வசதி

18th May 2023 10:42 PM

ADVERTISEMENT

வெயில் கடுமையாக இருக்கும் நிலையில், திருநள்ளாறு கோயில் யானை ஷவரில் நீராடும் வசதியை கோயில் நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை கோயில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி தீா்த்தக் குளத்தில் நீராடுவது வழக்கம்.

இந்நிலையில் கோயில் நிா்வாகம், யானை மண்டபத்தில் யானை நீராட வசதியாக ஷவா் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்தில் யானை ஷவரில் நீராடுகிறது. கத்திரி வெயில் காலமாக இருப்பதால், வெயிலின் தாக்கத்திலிருந்து மீள இந்த வசதியை மகிழ்ச்சியாக பயன்படுத்திக் கொள்வதாக யானை பாகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் வியாழக்கிழமை கூறுகையில், புதுவை வன பாதுகாப்பு அதிகாரியின் ஆலோசனையின்பேரில், யானை மண்டபத்தில் ஷவா் வசதி செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து யானைக்கு இது மாறுதலை ஏற்படுத்தும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT