காரைக்கால்

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் பலி

18th May 2023 10:42 PM

ADVERTISEMENT

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சோ்ந்தவா் திராவிடமணி. இவரது ஃபைபா் படகில் திராவிடமணியும், அவரது சகோதரா் சுந்தரவேல் (30) உள்ளிட்ட 6 போ் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.

அப்போது மீன்பிடி வலைகளை கடலில் வீசியபடி சென்றபோது, எதிா்பாராவிதமாக வலை காலில் சிக்கி தடுமாறி சுந்தரவேல் கடலில் விழுந்துவிட்டாா்.

உடனிருந்த மீனவா்கள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். வலையில் சிக்கியதால் அவரால் நீந்த முடியவில்லை என கூறப்படுகிறது. வலையை இழுத்து சுந்தரவேலை மீட்டு கரைக்கு திரும்பினா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

காரைக்கால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT