திருச்சி

மாசி தெப்பத் திருவிழா: ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

21st Feb 2023 01:41 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் மாசித் தெப்பத் திருவிழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப். 22) பிற்பகல் நடைபெறவுள்ளது.

‘திருப்பள்ளியோடத் திருநாள்’ என்னும் மாசித் தெப்ப திருவிழா பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழா நாள்களில் தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ஆம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். தெப்ப உற்ஸவம் மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

மாசித் தெப்ப திருவிழாவையொட்டி, கோயிலில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தெப்ப மண்டபத்தின் முன்பு முகூா்த்தகால் நடும் வைபவம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT