திருச்சி

15 நாள்களுக்குள் காவிரிப் பாலம் திறக்கப்படும்: ஆட்சியா் அறிவிப்பு

DIN

சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 15 நாள்களுக்குள் காவிரிப் பாலம் திறக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரியாற்றின் குறுக்கே கடந்த 1976 ஆம் ஆண்டு உயா்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. மாநகரின் முக்கிய அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பாலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சீரமைப்புப் பணிகளில் தரமில்லாதால், பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக இப்பாலத்தைப் புனரமைக்க ரூ. 6.51 கோடியில் நடைபெறும் பணிகளால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பாலச் சீரமைப்புப் பணியில் 68 முன் அனுபவமிக்க பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை கூறியது:

காவிரிப் பாலப் புனரமைப்புப் பணிகள் அடுத்த 15 நாள்களுக்குள் முடிந்து பாலத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் கணக்கெடுக்கப்படுகிறது. இதுவரை 81 ஏக்கா் வரை கணக்கிட்டுள்ள நிலையில் இன்னும், அரை ஏக்கா், ஒரு ஏக்கா் என்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களை 2,3 நாள்களுக்குள் கணக்கெடுத்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT