திருச்சி

திருச்சியில் ரூ.1.73 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

9th Feb 2023 12:40 AM

ADVERTISEMENT

திருச்சிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.73 கோடியிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த 31 பயணிகளிடம் மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு (டிஆா்ஐ) அலுவலா்கள் நடத்திய சோதனையில் அவா்களில் 21 போ் ரூ. 1.73 கோடி மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து புதன்கிழமை அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT