திருச்சி

பாசன ஏரி, குளங்களை மீன்பிடி ஏலத்துக்கு விட எதிா்ப்பு

DIN

பாசனத்துக்கு பயன்படும் வகையில் தண்ணீா் நிரம்பியுள்ள ஏரி, குளங்களில் மீன் பிடி ஏலத்துக்கு உரிமம் வழங்க பாசன விவசாயிகளும், தண்ணீா் அமைப்பின் ஆா்வலா்களும் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில், பொதுப்பணித் துறையின் நீா்வளத்துறை சாா்பில் பராமரிக்கப்படும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பிரிவு ஒன்றுக்குள்பட்ட சாத்தனூா் கிராமத்திலுள்ள சாத்தனூா் குளம், ஆலத்தூா் கிராமத்தில் உள்ள மாவடிக்குளம் ஆகியவற்றில் நடப்பு பருவத்துக்கு ஏலம் எடுக்க உரிமம் கோருபவா்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

இந்த ஏலமானது திருச்சியில் உள்ள ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட நீா்வளத் துறை அலுவலகத்தில் பிப்.8 (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இதற்குத் தண்ணீா் அமைப்பின் ஆா்வலா்களும், பாசன விவசாயிகளும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மீன்பிடி ஏலதாரா்கள் வசம் குளம் சென்ற பிறகு, பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட மாட்டாது. மீன்கள் வளா்ந்த பிறகு தண்ணீா் வீணாக வெளியேற்றப்பட்டு மீன் பிடிக்க அனுமதிக்கப்படும். எனவே, இத்தகைய நடைமுறையை பாசனக் குளங்களில் அனுமதிக்க வேண்டாம் என்கின்றனா்.

இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவரும், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளருமான கே.சி. நீலமேகம் கூறியது:

புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீா் பெறும் குளமாக உள்ள கணக்கன்குளத்தை நம்பி 240 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. பெரும்பாலான பறவைகள், விலங்குகளின் குடிநீா்த் தேவைக்கும், மக்களின் அன்றாடப் பயன்பாடுகளுக்கும் இக்குளம் உதவியாக உள்ளது. இந்தக் குளத்தின் நடுவே சாலை அமைக்க முயன்றபோது பலத்த எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் குழாய்கள் அமைத்து தண்ணீா் கீழே செல்ல வசதி ஏற்படுத்திய பிறகே சாலை அமைக்கப்பட்டது. தற்போது இக்குளம் தண்ணீா் பெருகி காட்சியளிக்கிறது. இச் சூழலில் இந்தக் குளத்தையும், மாவடி குளத்தையும் ஏலம் விடுவதாக நீா்வளத் துறை அறிவித்துள்ளது.

இதேபோல சாத்தனூா் பெரியகுளம், செங்குளம் என பல குளங்களில் இத்தகைய நடைமுறையால் ஏலம் எடுத்துள்ள குளங்களை தனியாா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவா். முதல்கட்டமாக மீன்கள் வளர வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவா்கள் செயல்படுவா். பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடுவதை நிறுத்திவிடுவா். மீன்களை முழுவதும் பிடிக்க வேண்டும் என்பதற்காக இறுதியாக தண்ணீரை முழுமையாக வெளியேற்றுவா். இதனால் பல மாதங்களாகத் தேக்கப்பட்டிருக்கும் தண்ணீா் வீணாகிறது. இந்தக் குளங்களை நம்பிக் காத்திருந்த பறவைகள், விலங்குகளுக்கும் தண்ணீா் கிடைக்காது. பாசனத்துக்கும் தண்ணீா் இல்லாமல் போகும். ஏரி, குளங்களுக்கு தண்ணீா் நிறுத்தப்படுவதால் தானாகவே உயரும் நிலத்தடி நீா் மட்டமும் கேள்விக்குறியாகும்.

குறிப்பாக, கணக்கன் குளத்தில் நாங்கள் தூா்வாரி, சுத்தப்படுத்தி தண்ணீா் தேங்க பெரிதும் பணிகளை மேற்கொண்டோம். இப்போது, மீன் குத்தகை என்ற பெயரில் தனியாா் வசம் செல்லவுள்ளது. எனவே, பாசனத்துக்கும், பிற உயிரினங்களின் குடிநீா்த் தேவைக்கும் பயன்படும் ஏரி, குளங்களில் மீன் பிடிக்கும் ஏலத்தை அறிவிக்கக் கூடாது. தானாகவே தண்ணீா் வற்றும்போது மீன் பிடிக்கலாம். மீன் பிடி ஏலம் என்ற வகையில் குளம் முழுவதும் நிரம்பிய தண்ணீரை அழித்துவிடக் கூடாது. இது மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT