திருச்சி

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளால் சில ரயில்கள் ரத்து

DIN

மதுரை இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில்களை இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் பிப்ரவரி 16, 17, 19, 23, 24, 26, மாா்ச் 2 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) , பிப். 17, 18, 20, 24, 25, 27, மாா்ச் 3 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779),

பிப். 16, 17, 20, 21, 23, 24, 27, 28, மாா்ச் 3 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), பிப். 17, 18, 21, 22, 24, 25, 28, மாா்ச் 1, 4 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606),

பிப். 16, 18, 23, 25, மாா்ச் 2 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய மதுரை - சென்னை மஹால் விரைவு ரயில் (22624), பிப். 17, 19, 24, 26 மாா்ச் 3 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623),

பிப். 26 இல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பிப்ரவரி 27- இல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862). பிப். 27, மாா்ச் 1 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகா்கோவில் ரயில் (22657), பிப். 28, மாா்ச் 2 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய நாகா்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658).

மாா்ச் 2, 3 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628). மாா்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகா்கோவில் விரைவு ரயில் (12667), மாா்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகா்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668). மாா்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மாா்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868) ஆகியவற்றின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT