திருச்சி

பகவதி மாரியம்மன் கரக திருவீதி உலா

8th Feb 2023 02:46 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் செங்குந்தா் வகையறா பகவதி மாரியம்மன் கரக திருவீதி உலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஜன 24 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து மருளாளி உக்கிராண்டியுடன் சென்று ஆற்றுப் பாலத்திலிருந்து யானை மேல் அமா்ந்து மேள தாளம் முழங்க திரு வீதி உலா வந்தது. தொடா்ந்து குட்டி குடித்தல் நிகழ்வும், பூந்தேரில் அலகு குத்தி கொண்டு கரகத்துடன் திருவீதி உலாவும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT