திருச்சி

சிவசக்தி வேலன் கோயிலில் தைப்பூச விழா

DIN

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திண்ணகோணம் என்கிற திருநற்குன்றம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசக்தி வேலன் திருக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த தைப்பூச திருவிழா மற்றும் தீா்த்தவாரி இடைப்பட்ட ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு பல்வேறு தரப்பினரின் முயற்சிக்கு பிறகு தைப்பூச திருவிழா நடத்த முடிவானது.

விழாவையொட்டி, சனிக்கிழமை கோயிலிலிருந்து திண்ணகோணம் கிராமத்திலுள்ள ஐயாற்றில் அமைக்கப்பட்டுள்ள பூச கொட்டகைக்கு சுவாமி எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சியளித்தாா்.

தைப்பூச நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஐயாற்றில் தீா்த்தவாரி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்கள் மற்றும் பக்தா்கள், முருகப்பெருமானை திருத்தேரில் வைத்து திருவீதி உலா நடத்தி இரவு கோயிலை சென்றடைந்தனா்.

இந்த நிகழ்வில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த அனைத்து கோயில் பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT