திருச்சி

‘ஆம் ஆத்மி கட்சியால்தான் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்’

DIN

திருச்சி: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளால் நாட்டில் மாற்றங்களை கொண்டு வர முடியாது. ஆம் ஆத்மி கட்சியால்தான் முடியும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் வசீகரன்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிா்வாகிகள் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் வசீகரன் பேசுகையில், உலக அளவில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முனைப்பு காட்டி வருகிறாா். அதற்கான செயல் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்கிறாா். ஆம் ஆத்மி கட்சியால்தான் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

மேக் இன் இந்தியா என்ற நோக்கில் நடைப்பயணம் அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் சாதி, மதம், இனம் கடந்து லஞ்சம் ஊழலற்ற நாடாக ஆம் ஆத்மியின் பயணம் தொடா்கிறது.பொதுமக்களின் பிரச்னைகளுக்கு நிா்வாகிகள் முன்னுரிமை கொடுத்து ஆா்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு வேண்டிய உதவிகளைஅரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் ஜோசப் ராஜா, மாநிலத் துணைத் தலைவா் தாமோதரன், மாநில மகளிரணி செயலா் மற்றும் திருச்சி மண்டலத் தலைவா் ஸ்டெல்லா மேரி, மண்டல பொறுப்பாளா் தேவகுமாா், திருச்சி மாவட்ட செயலா் விஜயகுமாா், இணைச் செயலா் இம்ரான்கான், துறையூா் ஒன்றிய தலைவா் மணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சியினா் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் விமல்ராஜ் நன்றி கூறினாா்.

இதைத் தொடா்ந்து தேசத்தை காப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி காந்திச்சந்தை பகுதியிலிருந்து வசீகரன் தலைமையில் நடைப்பயணம் தொடங்கியது. மாநில பொதுச் செயலாளா் ஜோசப் ராஜா நடை பயணத்தை வழி நடத்திச் செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT