திருச்சி

திருச்சியில் இந்து அமைப்புகள்போலீஸாருடன் வாக்குவாதம் சாலை மறியல் போராட்டம்

DIN

திருச்சியில், தைப்பூச விழாவையொட்டி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சனிக்கிழமை பாதயாத்திரை செல்ல போலீஸாா் தடை விதித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

தைப்பூச விழாவையொட்டி, திருச்சியில் விஷ்வ இந்து பரிஷத் அகில இந்திய செயலாளா் ஸ்தாணுமாலயன் தலைமையில் பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை காலை திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு வந்தனா். பின்னா் பால்குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரையாக வயலூா் முருகன் கோயிலுக்கு புறப்பட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீஸாா் பாதயாத்திரை சென்றவா்களை தடுத்து நிறுத்தினா். கொடியேந்தி பாதயாத்திரை சொல்ல அனுமதிக்க இயலாது எனக் கூறினா். இதனால் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினா் அம்மா மண்டபம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கொடிகள் இல்லாமல் பாத யாத்திரைக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதயாத்திரையாக இந்து அமைப்பினா் புறப்பட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT