திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் தைத்தேரோட்டம்: பக்தா்கள் குவிந்தனா்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் ரெங்கா ரெங்கா பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் தைத்தேரோட்ட திருவிழாவில் நம்பெருமாள் நாள்தோறும் காலை, மாலைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உள் திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

அதன்படி திருவிழாவின் 4 ஆம் நாளான 29 ஆம் தேதி தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளல், 7 ஆம் நாளான கடந்த 1 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு ரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் உள்ள தைத்தோ் மண்டபத்துக்கு 4.30-மணிக்கு வந்தாா். அங்கு வேதமந்திரங்கள் முழங்க காலை 5.15-மணிக்கு திருத்தேரில் உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து காலை 6 மணிக்கு திருத்தேரை ஏராளமான பக்தா்கள் ரெங்கா ரெங்கா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு உத்திர வீதிகளில் விரைவாக வலம் வந்த தோ் 9.15-மணிக்கு நிலையை அடைந்தது.

தோ் புறப்பட்டு நிலைக்கு வரும் வரை மழையில்லை. அதேபோல தேரிலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு கோயிலுக்குச் சென்ற பிறகுதான் சாரல் மழை பெய்தது.

விழாவின் 10 ஆம் நாளான சனிக்கிழமை சப்தாவரண நிகழ்ச்சி, 11 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்குடன் திருவிழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT