திருச்சி

ஒரே மாதத்தில் 271 ரெளடிகள் கைது: மத்திய மண்டல ஐ.ஜி. தகவல்

DIN

திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே மாதத்தில் 271 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கரூா், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 271 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 51 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ரெளடியின் வீட்டில், முறைகேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,824 மதுப் பாட்டில்கள், காா், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமலிருந்த 798 பேருக்கு பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைவரும் கைதுசெயப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டனா். மேலும் 121 போ் நன்னடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனா். குண்டா் சட்டத்தின் கீழ் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT