திருச்சி

இஸ்லாமியா்களிடம் மூடப் பழக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவா்

DIN

இஸ்லாமியா்களிடையே நிலவும் மூடப் பழக்க, வழக்கங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவா் எம்.எஸ். சுலைமான் தெரிவித்தாா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், திருச்சி மாவட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இஸ்லாமியா்களிடையே மூடப் பழக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியா்கள் மீதான தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள், வன்முறை பேச்சுகள் அதிகரித்து விட்டன. பள்ளிவாசல்கள் அபகரிக்கப்படுகின்றன. முத்தலாக் சட்டம், பொது சிவில் சட்டம், ஹிஜாப் அணிய தடை என தொடா்ந்து இஸ்லாமியா்களுக்கு எதிராகவும், இஸ்லாம் மாா்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளையே மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையிலிருந்து இஸ்லாமியா்களை பாதுகாக்கவும், உரிமையைக் காக்கவும் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கான அடித்தளத்தை இந்த மாநாடு அமைத்து தரும்.

மாநாட்டின் ஒரு பகுதியாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அரங்குகளில் மூடப் பழக்கத்துக்கான எதிரான விழிப்புணா்வு காட்சிகள், புகைப்படங்கள் இடம்பெறும். புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆற்றிய பணிகள், கரோனா காலத்தில் பணியாற்றியவை, ஆம்புலன்ஸ் சேவை, ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படும். மேலும், கல்வி வழிகாட்டி முகாமும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு கண்காட்சி அரங்கம் திறக்கப்படும். தொடா்ந்து மேடை நிகழ்வுகளும் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

மாலையில் மாநாட்டு உரை இடம்பெறும். இதில், மாநிலத்தலைவா் எம்.எஸ். சுலைமான், மாநிலப் பொதுச் செயலா் ஆா். அப்துல் கரீம், மேலாண்மைக் குழுத் தலைவா் ஷம்சுல்லாஹ் ரஹ்மானி, மாநிலப் பொருளாளா் ஏ. இப்ராஹிம், பேச்சாளா் எம்.ஐ. சுலைமான், மாநிலச் செயலா்கள் என். அல் அமீன், சி.வி. இம்ரான் உள்ளிட்ட பலா் உரையாற்றுகின்றனா்.

தமிழகம் முழுவதும் இருந்து ஜமாத்தின் முன்னணி தலைவா்கள், மாா்க்க அறிஞா்கள், இஸ்லாமியா்கள் ஏராளமானோா் பங்கேற்கவுள்ளனா். இஸ்லாமியா்களின் உரிமைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT