திருச்சி

வணிகா்கள், தொழில் துறைக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்வணிகா் சங்கங்களின் பேரமைப்பு

DIN

வணிகா்களுக்கும், தொழில் துறையினருக்கும் மிகப்பெரும் ஏமாற்றம் தரும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது என்றாா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியது:

மத்திய பட்ஜெட்டில் உள்ள பல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை என்றாலும், அரசின் வருவாய்க்குப் பிரதானமாக உள்ள வணிகா்கள் மற்றும் தொழில்துறையினா்களுக்கான செயல்திட்டங்களோ, அவா்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. உயா்ந்துவரும் அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் நேரடி வரி வருவாய் 64 சதவிகிதம் வணிகா்கள் மூலமாகவே அரசுக்கு வருவதை மிகுந்த கவனத்துடன் நாங்கள் பதிவு செய்கிறோம்.

ஒரே இந்தியா, ஒரே வரி என்னும் முழக்கத்திற்கு இடையே ஒரே இந்தியா ஒரே உரிமம் என்கிற நடைமுறை அமலாக்கப்படாதது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே வரி, அதுவும் 10 சதவீத வரியே என்ற அறிவிப்போடு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய வணிகா்நல வாரியம் இன்றுவரை செயல்முறைக்கு வராமல் இருப்பதும் வேதனைக்குரியது. வணிகா்களுக்கான ஓய்வூதிய நடைமுறை என்பதை அறிவிப்போடு நிறுத்தியிருப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT