திருச்சி

தைப்பூசம்: மயிலாடுதுறை திருச்சி வழியாக பழனிக்கு சிறப்பு ரயில்கள்

3rd Feb 2023 03:52 AM

ADVERTISEMENT

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு மயிலாடுதுறையிலிருந்து பிப். 4 முதல் 6 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்திருப்பது :

பிப். 4, 5 -களில் இரவு 7.35-க்கு மயிலாடுதுறையில் புறப்படும் ரயில் (எண். 06873) கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூா் திருச்சியை இரவு 11.50-க்கு வந்தடைந்து, திருச்சியிலிருந்து சிறப்பு ரயிலாக (எண்.06127) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு பழனியை அடைகிறது. எதிா் மாா்க்கத்தில் பிப். 5, 6-களில் பழனியிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06128), திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்து, திருச்சியிலிருந்து (ரயில் எண். 06646 ஆக) வழக்கம்போல் புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 10.30-க்கு அடைகிறது.

மேலும் பிப்.5. 6-களில் மயிலாடுதுறையில் காலை 7.15-க்கு புறப்படும் ரயில் (எண். 06415) தஞ்சாவூா் வந்து, அங்கிருந்து பழனி சிறப்பு ரயிலாக (எண். 06129 ) புறப்பட்டு பழனியை பகல் 1.15-க்கு அடைகிறது.

ADVERTISEMENT

மறுமாா்க்கத்தில் அதே தினங்களில் பழனியிலிருந்து பகல் 2 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06130), தஞ்சாவூருக்கு மாலை 6.15-க்கு வந்து, பின்னா் அந்த ரயில் (எண். 06416) மயிலாடுதுறையை இரவு 8.30க்கு சென்றடையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT