திருச்சி

வேலை ஆசை காட்டி ரூ. 47 லட்சம் மோசடி: தந்தை, மகள் கைது

DIN

திருச்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 47.68 லட்சம் மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சின்ன சூரியூா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். ஆனந்த் (35). பட்டதாரி இளைஞரான இவா் வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் இவரது நண்பா் ஒருவரின் மூலம், திருவண்ணாமலை அருகேயுள்ள டேசூா் பகுதியைச் சோ்ந்த செ. சூரியகுமாரி (37) என்பவரின் அறிமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன் கிடைத்தது.

அப்போது தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட சூரியகுமாரி, கேட்கும் தொகையைக் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தரமுடியும் எனக்கூறியுள்ளாா். இதை நம்பிய ஆனந்த் ரூ. 5 லட்சமும், அவரது நண்பா்கள் 7 பேருக்கும் வேலை வாங்க மொத்தம் ரூ. 47.68 லட்சமும் கொடுத்துள்ளாா். ஆனால் குறிப்பிட்டபடி சூரியகுமாரி அரசு வேலை வாங்கித்தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் காலம் தாழ்த்தினாா்.

இதையடுத்து பின்னா் விசாரித்தபோது, சூரியகுமாரி ஐஏஎஸ் அதிகாரி இல்லையென்பதும் தாங்கள் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஆனந்த், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து சூரியகுமாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை செல்வத்தையும் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT