திருச்சி

விவசாயிகளைக் காக்க வேளாண் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு: பாரதிய கிசான் சங்கம் பாராட்டு

DIN

பட்ஜெட்டில் விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தடுக்க வேளாண் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பாரதிய கிசான் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சங்கத்தின் மாநிலச் செயலா் என். வீரசேகரன் கூறியது:

மத்திய நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பல அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், விவசாயிகளின் எதிா்பாா்ப்பும் அதிகமாக உள்ளது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தொடா்ந்து நலிவடைகின்றனா். குறிப்பாக வேளாண் இடுபொருள்களின் விலை உயா்வால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். அதற்கான தீா்வை நிதிநிலை அறிக்கை விவாதத்தில் எதிா்பாா்க்கிறோம். குறிப்பாக வேளாண்பொருள்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் ஜிஎஸ்டி வசூல் முறையை கைவிட வேண்டும்.

மேலும், வேளாண் இடுபொருள்கள், உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வசூலில் விலக்கு அளிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள், முதன்மை மீன்பிடி சங்கங்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் வளா்ச்சிக்கும், சிறு விவசாயிகள், நிலமற்ற விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் அறிவித்துள்ளது. வேளாண்மைத் துறைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு என்பது மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். இது பாரதிய கிசான் சங்கத்தின் நீண்டகால கோரிக்கையாகும். குறிப்பாக அனைத்து உள்ளீடுகளின் தரம், விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய தகவல்களைப் பெறுவதன் மூலம் விவசாயிகள் சுரண்டப்படும் செயல்முறை நிறுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT