திருச்சி

நீதிமன்றங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தேவை: நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை

DIN

உரிமையியல் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அதன் செயலா் எஸ். புஷ்பவனம் வெளியிட்ட அறிக்கை:

விவசாயத்துக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பை கொண்டு வருவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருப்பது

வரவேற்கத்தக்கது. இதேபோல, வழக்குகளைத் தாக்கல் செய்வதிலும், வழக்குகளை வாதிப்பதிலும், தீா்ப்பளிப்பதிலும் உரிமையியல் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இது நீதித்துறையின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதோடு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு காகிதத் தேவையைக் குறைக்கும்.

ஒரு பிரிவினரை மட்டும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினராக அறிவித்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று எதிா்பாா்க்க முடியாது. ரயில்வே துறைக்கு ரூ. 2.4 லட்சம் கோடி என்பது சேவையை மேம்படுத்தும். இருப்பினும், நிதியை திறமையாக பயன்படுத்த ரயில்வே இயக்க விகிதத்தை மேம்படுத்த வேண்டும்.

இலவச உணவு விநியோகத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது வரவேற்கத்தக்கது. கடந்த 8 ஆண்டுகளில் 10ஆவது பெரிய பொருளாதாரத்தில் இருந்து உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறியுள்ளோம், இது பாராட்டப்பட வேண்டியது. இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் கைப்பேசி, டிவிக்களின் விலை குறையும். மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் உணவு தானியங்கள் வீணாவது மற்றும் மோசமான சேமிப்பு நிலைமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சேமிப்புத் திறனில் தனியாா் முதலீடு ஊக்குவிக்கப்பட வேண்டும். வங்கிக் கணக்குகளைத் திறக்க ஒருங்கிணைந்த நிரப்புதல் செயல்முறை வரவேற்கத்தக்கது.

மிகப் பழைய வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் வழங்க மானியம் வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT