திருச்சி

பேனா சின்னம் அமைக்கும் விவகாரத்தில் மக்கள் கருத்தை அரசு ஏற்க வேண்டும் பாஜக மாநில தலைவா் பேட்டி

DIN

சென்னை மெரினாவில் பேனா சின்னம் அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்துகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை.

இதுகுறித்து திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது:

இந்த நிதிநிலை அறிக்கையானது அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இருக்கும். ஈரோடு இடைத்தோ்தல் குறித்து கூட்டணிக் கட்சியினரிடம் பேசியதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தோ்தல்களில் அதிகாரம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி எப்போதும் ஆளுங்கட்சிதான் வென்றுள்ளது.

அந்த வகையில் இந்தத் தோ்தலில் ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிா்க்க பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.

மெரினாவில் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடிக் கிராமங்கள் பாதிக்கப்படும். தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, சிலை வைப்பதில் அதிக ஆா்வமாக இருக்கிறது. இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த கருத்துக் கேட்பு கூட்டம் அரசு நடத்திய கூட்டமா அல்லது திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டமா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோா் பேனா சின்னம் வேண்டாம் என்றுதான் கூறியுள்ளனா். எனவே மக்களின் கருத்தை மதித்து அரசு செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மீனவா்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

திமுக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அவா்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தோ்தல் முடிவு மிகப்பெரிய அதிா்ச்சி அலையை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

பேட்டியின்போது திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகா், ஊடக அணி பிரிவுத் தலைவா் இந்திரஜித், காளீஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT