திருச்சி

மணப்பாறையில் 2-ஆம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி மற்றும் துவரங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையோர வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

மணப்பாறை நகராட்சி மற்றும் துவரங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் நிறுத்த போதிய வசதியின்மை, அவசர கால ஊா்திகள் கூட எளிதாக சாலையில் பயணிக்க முடியாத நிலை என வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகம் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக கடைவீதி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை வணிகா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒலிபெருக்கிகள் மூலம் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்து இருந்தனா். வணிக நிறுவனங்களுக்கு தாங்களாகவே முன்வந்து அகற்றி வருகின்றனா். இருப்பினும் சில வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் திங்கட்கிழமை முதல் நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளும் தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT