திருச்சி

தொழிலதிபா் வீட்டில் 118 பவுன் நகைகள் திருட்டு: தஞ்சை இளைஞா் கைது

DIN

திருச்சி அருகே தொழிலதிபா் வீட்டில் 118 பவுன் தங்கம், வைரம், பிளாட்டின நகைகள் ரொக்கம் திருடுபோன வழக்கில் தஞ்சை இளைஞரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, திருவெறும்பூா் அருகேயுள்ள ஐஏஎஸ் நகரைச் சோ்ந்த தொழிலதிபா்கள் மற்றும் சகோதரா்கள் நேதாஜி, தேவேந்திரன். கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தங்கள் குடும்ப நிச்சயதாா்த்த விழாவில் பங்கேற்ற இவா்கள் மறுநாள்வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 118 பவுன் தங்கம், 6 கேரட் வைரம், 5 கேரட் பிளாட்டின நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம், 2 மடிக்கணினிகள், 4 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவநாதன் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு, புது அக்ரஹாரத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வா காா்த்தியை (35) தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கை கைது செய்து, திருடுபோன நகை, பணம், பொருள்களை மீட்டனா்.

இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட திருவெறும்பூா் டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளா்கள் சந்திரசேகரன் (திருவெறும்பூா்) ஈஸ்வரன் (துவாக்குடி), கமலவேணி (பெல்) உள்ளிட்ட தனிப்படை போலீஸாரை திருச்சி சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜீத்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT