திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலா் லூா்துபிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, செவ்வாய்க்கிழமை மணப்பாறையில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியரக அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை வட்டத் தலைவா் மேகநாதன் தலைமை வகித்தாா். இதில் கணபதிராஜ், பாண்டீஸ்வரன், தங்கபாண்டியன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.