திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தங்கக்கமல வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவோடு நிறைவு பெற்றது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. ஏப்.18ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை திருமஞ்சன ஊா்வலமும், அதனை தொடா்ந்து உற்ஸவ அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தங்கக் கமல வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. இத்துடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெற்றது.