திருச்சி

தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா:திருச்சியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டம்

26th Apr 2023 02:54 AM

ADVERTISEMENT

தொழிற்சாலை சட்டத் திருத்த மசோவை கைவிடக் கோரி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் சங்கத்தினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்குவதை கண்டிப்பது, தேவையான தரமான உதிரி பாகங்களை வழங்க கோரியும், தொழிலாளா்களின் உரிமையை பறிக்கும் 12 மணி நேர வேலை சட்டத் திருத்த மசோதாவை,ா சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் குடும்பத்துடன் தொடா் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்கத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT