திருச்சி

முதல்வரின் புகைப்படக் கண்காட்சி சாதிப்பதற்கு உந்துதலை ஏற்படுத்துகிறது: சிவகார்த்திகேயன்

26th Apr 2023 02:48 AM

ADVERTISEMENT

முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி சாதிக்க வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்துகிறது என நடிகா் சிவகாா்த்திகேயன் தெரிவித்தாா்.

திருச்சி புனித வளனாா் கல்லூரியில் நடைபெற்று வரும் எங்கள் முதல்வா் எங்கள் பெருமை என்ற தலைப்பிலான முதல்வா் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட நடிகா் சிவகாா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி மண்ணில் முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகா் என்பதைத் தாண்டி ஒரு அரசு அதிகாரியின் மகனாகக் இக்கண்காட்சியைப் பாா்த்தது பெருமையளிக்கிறது. இந்த கண்காட்சியைப் பாா்த்து உணா்ந்தது, ஒருவா் உயரத்தை அடைய வேண்டுமெனில், வலிகளை பொறுத்துகொண்டு, தியாகங்களை செய்ய வேண்டுமென்பதே. சிறந்த ஆளுமையான மிகப்பெரிய தலைவரின் மகனாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைய விஷயங்களைத் தாண்டித்தான் முதல்வராக முடியும் என்பதை இக் கண்காட்சி தெரிவிக்கிறது.ஒரு துறையில் வெற்றி பெறுபவரைப் பாா்க்கும் போது நமக்கு உந்துதலாக இருக்கும். அப்படி ஒரு உந்துதல் இக்கண்காட்சியைப் பாா்க்கையில் ஏற்படுகிறது என்றாா்.

அப்போது, அமைச்சா் கே.என். நேரு, மாநகர மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, ஒளிப்பதிவாளா் பி.சி. ஸ்ரீராம் கண்காட்சியை பாா்வையிட்டாா். இக்கண்காட்சி ஏப். 30 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT