திருச்சி

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கக் கோரி தேவேந்திரகுல வேளாளா் நலச் சங்கத்தினா் பேரணி

25th Apr 2023 02:19 AM

ADVERTISEMENT

தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கக் கோரி திருச்சியில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி அருகே தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் நிறுவனத் தலைவா் பாச. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

பேரணியில், திருச்சியின் மத்திய பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் முழு உருவச் சிலையை நிறுவ வேண்டும். திருச்சி பஞ்சப்பூரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வரும் தேவேந்திர குல வேளாளா்களை எஸ்.சி. பட்டியலை விட்டு வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு முழக்கங்களை எழுப்பிய அவா்கள், ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT