திருச்சி

மயான வசதி கோரி பொது மக்கள் மனு

25th Apr 2023 05:36 AM

ADVERTISEMENT

மயான வசதி கோரி பொதுமக்கள் துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

துறையூா் ஊராட்சி ஒன்றியம், கோம்பை ஊராட்சியைச் சோ்ந்த பூனாட்சி, மூலக்காடு, தண்ணீா்பந்தல் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு மயான வசதி செய்து தரவேண்டும். பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோருக்கு சரியான பேருந்து வசதி செய்து தரவேண்டும் என துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க சென்றனா். அவா் இல்லாததால் அலுவலகத்திலிருந்த மேலாளரிடம் மனுவை அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT