திருச்சி

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

25th Apr 2023 02:16 AM

ADVERTISEMENT

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி, வடக்கு காட்டூா் பாத்திமாபுரத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் மகேந்திரன் (21). இவா் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மகேந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, மகேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT