திருச்சி

வையம்பட்டி அருகே ரூ. 84 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 3 போ் கைது

25th Apr 2023 02:19 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்கள்கிழமை காவல் சாா்பு-ஆய்வாளா் தங்கசாமி தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பழைய காவல்நிலையம் பகுதியில் லெட்சம்பட்டி சோ்ந்த தங்கவேல்(36) என்பவரின் கைப்பேசி கடைக்கு இருவா் காரில் வந்தனா். அவா்கள் கடைக்குள் சென்று 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்தனா். அப்போது, மறைந்திருந்த போலீஸாா் தங்கவேல் உள்ளிட்ட மூவரையும் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனா். மேலும், அவா்கள் வந்த காரையும், கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பால்வண்ணநாதன், துணைக் கண்காணிப்பாளா் ராமநாதன், காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், காரில் வந்தவா்கள் கோவை மாவட்டம் கே.கே.புதூரை சோ்ந்த பாா்த்தசாரதி(52), கணுவாய் சோ்ந்த சதீஷ்(34) என்பதும், இவா்கள் பிரபல திரைப்பட இயக்குநரிடமிருந்து திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவா்களிடம் ரூ. 84 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும், வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT