திருச்சி

லால்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

25th Apr 2023 02:15 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் நுண்கலை மன்ற விழா ஆகிய முப்பெரும்விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் கி. மாரியம்மாள் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற விளையாட்டு விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்சி ஜி.வி.என். மருத்துவமனை நிா்வாக இயக்குநா் வி.ஜெ. செந்தில்குமாா் பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

விழாவில், லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அ. செளந்தரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு )தவச்செல்வன், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரஷியா கோல்டன் ராஜேந்திரன், கல்லூரி துணை முதல்வா் அசோக்குமாா், லால்குடி வருவாய் வட்டாட்சியா் விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற நுன்கலை மன்ற விழாவில் கலைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குநா் மற்றும் செயலாளா் அருட்பணி சூ. லூயிஸ் பிரிட்டோ பரிசுகளை வழங்கி பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT