திருச்சி

காப்பகம் முன்பு திரண்ட மாதா் சங்கத்தினா்

15th Apr 2023 11:58 PM

ADVERTISEMENT

 

திருவானைக்கா மாம்பழச்சாலை அருகே உள்ள குழந்தைகள் காப்பகம் முன் சனிக்கிழமை இந்திய மாதா் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காப்பகத்தினா் அவா்களிடம் சமாதானம் பேசி மாமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சுரேஷ், ஏ.ஐ.ஓய்.எப். மாவட்டச் செயலா் வழக்குரைஞா் என்.செல்வக்குமாா், மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாா்வதி, சிவா, காஜா ஆகியோா் குழந்தைகள் பராமரிப்பு பகுதி மற்றும் குழந்தைகளிடம் நேரில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து அண்மையில் காப்பகத்தில் உயிரிழந்து போன குழந்தைகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அரசே இந்தக் காப்பகத்தை ஏற்று நடத்த வேண்டும், ஊழியா் பற்றாக்குறை, பாதுகாப்பில் கவனக்குறைவு ஆகியவற்றைப் போக்க மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னா் ஆா்ப்பாட்டம் செய்ய வந்தவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT