திருச்சி

தேசிய திருநங்கைகள் தினம்

15th Apr 2023 11:58 PM

ADVERTISEMENT

 

 திருச்சி திருவெறும்பூா் அருகே வேங்கூரில் தேசிய திருநங்கைகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வேங்கூரில் தென்னிந்திய திருநங்கைகளின் கூட்டமைப்பின் தலைவா் மோகனா இல்லத்தில் தேசிய திருநங்கைகள் தின விழா நடைபெற்றது. இதில் தலைவா் மோகனா உள்ளிட்ட திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினா். கும்பி அடித்து, தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் திருநங்கைகளின் கோரிக்கைகள் தொடா்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாதா் சங்க செயலாளா் மல்லிகா, பத்மாவதி குழுவினா் பங்கேற்று, திருநங்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT